காலிஃப்ளவர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 1 (சிறியது)
வெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த தக்காளி – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட்– 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லிதழை – சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை எடுத்து சூடான உப்பு தண்ணீரில் போட்டு, சில நிமிடம் நன்கு ஊற வைக்கவும். பின்பு காலிஃப்ளவரை உற வைத்த தண்ணீரை வடிகட்டியபின், அதை சிறிய பூக்களாக பிரித்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவரைப் போட்டு சில நிமிடம் வேகும் வரை நன்கு வறுத்து, எடுத்து கொள்ளவும். மேலும் அதே வாணலியில் கூடுதலாக சிறிது எண்ணெயை ஊற்றி, சீரகம் போட்டு தாளிக்கவும்.
பிறகு சீரகம் நன்கு பொரிந்ததும், அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து, ஒரு சில நிமிடம் வதக்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் பேஸ்ட், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை கிளறி விடவும்.
அதன் பின்பு அரைத்த தக்காளியை ஊற்றி, சில நிமிடம் நன்கு கிளறி விட்டு, பூக்களாக பிரித்த காலிஃப்ளவர்,தேவையான அளவு உப்பு, தேங்காய் பால் ஊற்றி சிறிது கிளறிவிட்டபின், சில நிமிடம் நன்கு வேக வைக்கவும்
இறுதியில் வேக வைத்த கலவையானது நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு கெட்டியானதும், கொத்த மல்லி தழையை தூவி விட்டு, இறக்கி சாதத்துடன் பரிமாறினால் காரசாரமான காலிஃப்ளவர் குழம்பு ரெடி.