கேரட் – பாதாம் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் – 2
பாதாம் – 6
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
பால் – 2 கப்
சர்க்கரை – தேவைக்கேற்ப
நெய் – சிறிதளவு
செய்முறை:
முதலில் கேரட்டை எடுத்து, சுத்தம் செய்து தோல் நீக்கியபின், அதை துருவி கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்றி, கேரட்டை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி ஆற வைத்து கொள்ளவும். பின்னர் மற்றோரு பாத்திரத்தில் பாதாம் பருப்பை போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து எடுத்து தோல் நீக்கி கொள்ளவும்.
மேலும் மிக்சிஜாரில் வதக்கி வைத்த கேரட் கலவை, தோல் உரித்த பாதம் பருப்பு, மாவாக நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். பிறகு வடிகட்டிய கேரட் கலவை, ஏலக்காய் தூள் சேர்த்து, ஆற வைத்த பால் சேர்த்து நன்கு கலந்து பிரிட்ஜில் குளிர வைத்து எடுத்து பரிமாறினால் ருசியான கேரட், பாதாம் ஜூஸ் ரெடி.