கேரட் கேக் செய்ய தேவையான பொருட்கள்:
மைதா – 3/4 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
துருவிய கேரட் – 1/2 கப்
தயிர் – 3/4 கப்
ஆலிவ் ஆயில் – 1/4 கப்
பால் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
பிஸ்தா, பாதம் – ஒரு கையளவு
பட்டர் பேப்பர் – 1
செய்முறை:
முதலில் சல்லடையில் மைதா, கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரைப் போட்டு சலித்து தனியாக வைக்கவும். மேலும் ஒரு பாத்திரத்தில் கேரட்டை எடுத்து துருவி எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தில் வைத்து அதில் தயிர், சர்க்கரை, பால், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கிளறி விடவும்.
அதன் பின்பு அதில் வென்னிலா எசன்ஸ், கேரட், மைதா கலவையை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ளவும்.
மேலும் பேக்கிங் ட்ரேயை எடுத்து, அதில் பட்டர் பேப்பரை வைத்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை தூவி, பின்பு கலந்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றிஅதை சரிசமமாக்கி விட்டு, மேலே பாதாம் பிஸ்தாவை தூவி கொள்ளவும்
பிறகு மைக்ரோவேவ் ஓவனை 182 டிகிரி C-யில் 10 நிமிடம் சூடேற்றவும்.பின்பு அதற்குள் பேக்கிங் ட்ரேயை அதில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்து உடனே ஒரு தட்டில் மாற்றி, 15 நிமிடம் குளிர நன்கு வைக்கவும்.
பின்பு குளிர வைத்த கலவையில் உள்ள பட்டர் பேப்பரை கவனமாக எடுத்து விடவும். அதற்கு பின்பு கேக் நன்கு குளிர்ந்ததும் துண்டுகளாக்கி, பரிமாறினால் சுவையான கேரட் கேக் தயார். தேவைப்பட்டால் அதற்கு மேல் கேக் கிரீம்களால் அலங்கரித்து கொள்ளலாம்.