கேரட் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 6
புளி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – சுவைக்கு
கடுகு, உளுந்து – தாளிக்க
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் கேரட்டை எடுத்து தோல் சீவி, சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய கேரட்டை போட்டு சில நிமிடம் வரை நன்கு வதக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பைச் வாசம் வரும் வரை சிவக்க வறுத்ததும், அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், போட்டு 2 நிமிடம் வரை வதக்கி எடுத்து நன்கு ஆற வைக்கவும்.
பின்பு வறுத்த பொருட்களுடன், உப்பு சேர்த்து மிக்சிஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர்ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.
மேலும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் அரைத்த கேரட் கலவையை கொட்டிசில நிமிடம் வதக்கி இறக்கி இட்லி அல்லது தோசையுடன் பரிமாறினால் ருசியான கேரட் சட்னி ரெடி.