கேரட் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கப்
இட்லி அரிசி – 1/2 கப்
துருவிய கேரட் – 3/4 கப்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 6
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – ருசிக்கேற்ப
கடுகு – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு அகலமான முடியில் கேரட்டை எடுத்து, தண்ணீரால் சுத்தம் செய்து, பூவாக கேரட்டை துருவி எடுத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் இட்லி அரிசியையும் பச்சரிசியையும் தனித்தனியாக எடுத்து ,மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றியபின் 4 மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும்.
பிறகு கிரைண்டரிலோ அல்லது மிக்சிஜாரிலோ உற வைத்த இட்லி அரிசியையும், பச்சரிசியையும் போட்டு, துருவிய கேரட் துண்டுகள், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, ருசிக்கேற்ப உப்பு தூவி மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
மேலும் அரைத்த கலவையை கூடுதலாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் விட நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில்,எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து இறக்கி வைத்து, கலந்து வைத்த மாவுடன் ஊற்றி நன்கு கலக்கவும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும், கலந்து வைத்த மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மெல்லிய தோசை போல் வார்த்து,அதன் சுற்றிலும் லேசாக எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசையை மூடி வைத்து வேக வைத்து, மறுபுறம் திருப்பி விட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறினால் ருசியான கேரட் தோசை ரெடி.