காளிஃபிளவர் முட்டை பிரட்டல் செய்ய தேவையான பொருள்கள்:
காலிஃப்ளவர் – 1
முட்டை – 2
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 10
உப்பு – தேவைக்கேற்ப
சிகப்பு கலர் – 1 சிட்டிகை
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டிஸ்பூன்
வெள்ளை மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
சோம்பு தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் காலிஃப்ளவர், உப்பு, மஞ்சள்தூள், போதுமான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் வெள்ளை மிளகுத் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், கொதிக்க வைத்த காலிஃப்ளவர், முட்டை சேர்த்து நன்கு விரவி வைத்து கொள்ளவும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி விரவி வைத்தகலவையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் மற்றோரு வானொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுத்ததும், பின்பு அதை வறுத்து வைத்த காலிஃப்ளவரில் சேர்த்துகொள்ளவும்.
இறுதியில் அதனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மல்லித் தழையை தூவி இறக்கி வைத்து பரிமாறினால் சுவையான காளிஃபிளவர் முட்டை பிரட்டல் ரெடி. இதை சப்பாத்தி, தயிர்சாதம், எலுமிச்சை சாதத்துடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.