Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற… அதிக சத்துக்கள் நிறைந்த… அருமையான ரெசிபி செய்து அசத்துங்க..!!

காலிஃப்ளவர் முட்டை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர்                  – 1
பெரிய வெங்காயம்    – 4
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள்             – ஒரு தேக்கரண்டி
முட்டை                            – 4
உப்பு                                    – தேவைக்கு
கொத்தமல்லி தழை   – தேவையான அளவு
எண்ணெய்                       – தேவையான அளவு

தாளிக்க:

சீரகம்                                  – அரை தேக்கரண்டி
கடலைபருப்பு                – கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு           – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை              –  ஒரு கொத்து
பச்சை மிளகாய்            – 2

செய்முறை:

முதலில் ஒரு பாதத்தில் பாத்திரத்தில் கொதித்த வெந்நீரை எடுத்து,அதில் காலிஃப்ளவரை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடம் மூடி வைத்து எடுத்து அதை சிறு பூக்களாக பிரித்து எடுத்து கொள்ளவும்.

பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தழையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் மிக்சி ஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டுகளை போட்டு மையாக அரைத்து, பேஸ்ட் போல் எடுத்து கொள்ளவும்.

மேலும் அகலமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி  சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாக தாளித்தபின், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கியபின், அதில் அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.

பின்னர் வதக்கிய இஞ்சி பூண்டு கலவையுடன், பூக்களாக பிரித்த காலிஃப்ளவரை போட்டு கரண்டியால் நன்கு கிளறி விட்டதும், அதில் மிளகாய்த் தூள் தூவி, லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக வைக்கவும்.

அடுத்து வேக வைத்த காலிஃப்ளவரில், முட்டைகளை உடைத்து ஊற்றி கரண்டியால் கிளறிவிடாமல் அப்படியே வேகவைத்தபின், சில நிமிடம் கழித்து கிளறிவிடவும்.

பின்பு கிளறி விட்டகலவையானது நன்கு  வெந்து, கெட்டியானதும், அதில் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவியபின்,  இறக்கி வைத்து பரிமாறினால், சுவையான காலிஃப்ளவர் முட்டை பொரியல் ரெடி.

Categories

Tech |