Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கெட்ட கொழுப்பை குறைத்து… புற்று நோயிலிருந்தும் முற்றிலும் வராமல் தடுக்க… இந்த ரெசிபிய ட்ரை பண்ணி பாருங்க..!!

சென்னா தேங்காய்ப்பால் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை – 100 கிராம்
மிளகாய்த் தூள்                                   – 1/2 தேக்கரண்டி
தனியாதூள்                                           – 3 மேஜைக்கரண்டி
சீரகத்தூள்                                               – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                                         – 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட்                      – 2 தேக்கரண்டி
உப்பு                                                          – தேவையானஅளவு
தேங்காய்                                                – அரை முறி

அரைக்க:

கொத்தமல்லித்தழை                      – ஒரு கொத்து
தக்காளி                                                  – 1

தாளிக்க:

எண்ணெய்                                             – 3 மேஜைக்கரண்டி
பட்டை                                                     – 2 சிறிய துண்டு
கிராம்பு                                                     – 1
வெங்காயம்                                           – 5
கறிவேப்பிலை                                     – ஒரு கொத்து

செய்முறை:

முதலில் வெள்ளை கொண்டக்கடலையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 7 மணி நேரம் நன்கு ஊற வைத்தபின், அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஊற வைத்த கொண்டைக்கடலையை போட்டு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

பின்பு வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் மிக்சிஜாரில் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழையை போட்டு நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் தேங்காயை எடுத்து துண்டுகளாக நறுக்கியபின், மிக்சிஜாரில் போட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மையாக அரைத்ததும், அதை வடிகட்டி தேங்காய் பாலை மட்டும் எடுத்து கொள்ளவும்.

மேலும்  அடுப்பில் கடாயை வைத்து,  அதில்அரைத்து வடிகட்டி எடுத்த தேங்காய்ப்பாலில் பாதியாக ஊற்றி, வேக  வைத்த கொண்டைக்கடலை, மிளகாய்த்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், அரைத்த தக்காளி கலவை, இஞ்சி பூண்டு பேஸ்ட், ருசிக்கேற்ப உப்பு தூவி நன்கு கொதிக்க வைக்கவும்.

பிறகு கொதிக்க வைத்த கலவையில், மசாலாவின் பச்சை வாசனை போனபின், அதில் மீதியுள்ள தேங்காய்ப் பாலை ஊற்றி நன்கு கொதித்தபின் இறக்கி வைக்கவும்.

பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், அதனுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக  தாளித்து கொள்ளவும்.

இறுதியில் தாளித்த கலவையை, இறக்கி வைத்த கலவையில் ஊற்றி கரண்டியால் நன்கு  கிளறி விட்டபின், நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி வைத்து சப்பாத்தியுடன் பரிமாறினால், ருசியான  சென்னா தேங்காய்ப்பால் குழம்பு ரெடி.

Categories

Tech |