Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த… ரெஸ்ட்ராடென்ட் சுவையில்… வீட்டிலேயே எளிதில் செய்யலாம்..!!

 சிக்கன் பிரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ்         – 1/2 கிலோ
சிக்கன்                             – 1/2 கிலோ
வெங்காயம்                  – 2
பச்சை மிளகாய்          – 2
சிக்கன் 65 மசாலா      – ஒரு பாக்கெட்
வெங்காயத் தாள்        – 4 பொடியாக நறுக்கியது
மிளகாய் பேஸ்ட்         – 2 ஸ்பூன்
கறிமாசாலா                   – 1 ஸ்பூன்
தக்காளி விழுது            – 1 ஸ்பூன்
சீரக தூள், சர்க்கரை     – 1/2 ஸ்பூன்
அஜினோமோட்டோ   – சிறிதளவு
மிளகுத் தூள்                   – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு           – தேவையான அளவு
உப்பு, எண்ணெய்           – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் பாஸ்மதி அரிசியை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து முக்கால் பாகம் வேகும் வரை வைத்து 3 விசில் வைத்ததும், விசில் போனபின் முடியை திறந்து, சிறிது எண்ணெய் ஊற்றியபின் கரண்டியால் நன்கு கிளறியபின், ஆற வைக்கவும்.

பின்பு சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டியபின், சுத்தம் செய்து, அதில் சிக்கன் 65 பொடியை போட்டு நன்கு விரவியபின், ஒரு மணி நேரம் கழிந்ததும், அடுப்பில் அகலமான கடாயை வைத்து அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும், விரவி வைத்த ஒவ்வொரு சிக்கன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

மேலும் மிக்சிஜாரில் மிளகாயை போட்டு, சிறிதளவு வினிகரை ஊற்றி நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், வெங்காக தாள், கொத்தமல்லி தழைகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு அகலமான வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கியபின், ருக்கேற்ப உப்பு, சர்க்கரை, அஜினோமோட்டோ, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறியபின், மேலும் பொரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கன் சேர்த்து நன்கு பிரட்டிகொள்ளவும்.

பின்னர், அதனுடன் வேக வைத்த சாதம், மிளகுத் தூள், தக்காளி சாஸ், சீரகத் தூள், கறிமசாலா தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் நன்கு கிளறி விட்டபின், இறுதியாக நறுக்கிய கொத்தமல்லிதழை, வெங்காயத் தாளை தூவியபின்  இறக்கி வைத்து சூடாக பரிமாறினால் ருசியான சிக்கன் பிரைட் ரைஸ் ரெடி.

Categories

Tech |