Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சைவ பிரியர்களுக்கு ஏற்ற… திரும்ப திரும்ப சுவைக்க தூண்டும்… ஒரு அருமையான ரெசிபி..!!

 சிக்கன் ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன்                                 – 1/2 கிலோ
எண்ணெய்                        – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்                     – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய்             – 3 (கீறியது)
கறிவேப்பிலை               – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட்– 1 டேபிள் ஸ்பூன்
உப்பு                                     – தேவையான அளவு
மஞ்சள் தூள்                    – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை   – 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

 அரைக்க:

மல்லி தூள்                     – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம்                                 – 1 டீஸ்பூன்
வரமிளகாய்                   – 5
சோம்பு                             – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை                             – 3
கல்பாசி                           – 2 துண்டு
ஏலக்காய்                       – 4
கிராம்பு                            – 4
மிளகு                               – 1 டீஸ்பூன்
அன்னாசிப்பூ                – 1

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் சிக்கனை எடுத்து துண்டுகளாக நறுக்கியபின், அதை சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு தோல் நீக்கி, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய்பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

மேலும் அடுப்பில்  வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, ஏலக்காய்,  சீரகம், மிளகு, சீரகம், வரமிளகாய், கல்பாசி, சோம்பு, போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்தபின் அதை இறக்கி குளிர வைக்கவும்.

பின்பு வறுத்து ஆற வைத்த கலவையை, மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். மேலும் அதே மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி,பூண்டை போட்டு பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

மேலும் கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கியபின், அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நிமிடம் நன்கு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.

பிறகு அதில் நறுக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வதக்கியதும், மூடி வைத்து வேக வைக்கவும். பின்னர் சிக்கன்நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், சிக்கனை நன்கு பிரட்டிவிடவும்.

இறுதியில் அதில் அரைத்த மசாலா கலவையை சேர்த்து சில நிமிடம் நன்கு பிரட்டியபின், கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி வைத்து சாதத்துடன்   பரிமாறினால் அதிரடியான ருசியில் சூப்பரான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெடி.

Categories

Tech |