Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீந்துபோன சப்பாத்தியில்…சுவையான ருசியில்…சில்லி கொத்து சப்பாத்தி ரெஸிபி..!!

சில்லி கொத்து சப்பாத்தி செய்ய தேவையான பொருள்கள்:

சப்பாத்தி                                – 4
வெங்காயம்                         – 2
தக்காளி                                 – 2
குடை மிளகாய்                  – ஒன்று (சிறியது)
இஞ்சி பூண்டு விழுது      – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்                 – 1
தனி மிளகாய்த்தூள்        – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்            – 1 தேக்கரண்டி
சோம்பு தூள்                        – 1 தேக்கரண்டி
முட்டை                                – 2

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேலும் இஞ்சி பூண்டை எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, லவங்கம், பட்டை போட்டு  தாளித்ததுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அதன் பின்பு அதனுடன் தக்காளி, குடை மிளகாய் சேர்த்து நன்கு  வதக்கி, அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, தனி மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,சோம்பு தூள், உப்பு சேர்த்து நன்கு வேகும் அளவுக்கு கிளறி விடவும்.

மேலும் வதக்கிய கலவையுடன், நறுக்கிய சப்பாத்திகளை சேர்த்து, மசாலா நன்கு சப்பாத்தியுடன் சேர்ந்து வரும் வரை கிளறியவுடன் முட்டையை உடைத்து, அதில் ஊற்றி முட்டை நன்கு  வேக வைக்கவும்.

மேலும் வேக வைத்த கலவையில், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறினால் ருசியான  சில்லி கொத்து சப்பாத்தி ரெடி.

Categories

Tech |