Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தயிர் சாதத்துக்கு ஏற்ற… ருசியான சைடிஸ்..!!

சில்லி சோயா செய்ய தேவையான பொருள்கள்:

சோயா                                   – 100 கிராம்
வெங்காயம்                        – 2
வெங்காயம் பேஸ்ட்      – 2 மேஜைக்கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 மேஜைக்கரண்டி
குடைமிளகாய்                 – 1
சோயா சார்ஸ்                  – 2 மேஜைக்கரண்டி
சில்லி சார்ஸ்                    – 2 மேஜைக்கரண்டி
டொமாடோ சார்ஸ்        – 2 மேஜைக்கரண்டி
வைட் வினிகர்                 – 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய்               – 5
உப்பு                                       – 1 மேஜைக்கரண்டி
எண்ணெய்                         – 5 மேஜைக்கரண்டி

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து, அதில் சோயாவை எடுத்து, தண்ணீர் ஊற்றி, சில நிமிடம் வேக வைத்து எடுத்து, அதை தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து கொள்ளவும்.

பின்பு வெங்காயத்தை எடுத்து சிறுதுண்டுகளாக நறுக்கி, நன்கு மிக்சிஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். அதன் பின்பு இஞ்சி பூண்டை எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

பிறகு வேக வைத்த சோயாவுடன், வெங்காயம் பேஸ்ட் , இஞ்சி-பூண்டு பேஸ்ட்,  சோயா சார்ஸ், டொமாடோ சார்ஸ் ,சில்லி சார்ஸ் மற்றும் வினிகர் சேர்த்து ஒரு மணி நேரம் நன்கு  ஊறவிடவும் .

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊறவைத்த சோயாவை அதில் போட்டு சில நிமிடம் கழித்து நன்கு பொரித்து  எடுத்து கொள்ளவும். மேலும் மீதமுள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும் .

பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு சில  நிமிடம் வதக்கவும். அதனை அடுத்து பொரித்து எடுத்த சோயாவை சேர்த்து, மீதமுள்ள சார்ஸ் ,உப்பு, குடைமிளகாய் சேர்த்து நன்கு கலக்கியபின்  மூடி வைத்து வேக விட்டு எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இறுதியில்அதனுடன் நறுக்கிய  பச்சை மிளகாய் போட்டு அலங்கரித்து, எடுத்து பரிமாறினால் சுவையான சில்லி சோயா ரெடி.

Categories

Tech |