Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்த்ததும் சாப்பிட தூண்டும்… இந்த அருமையான ரெசிபிய… குழந்தைகளுக்கு செய்து கொடுங்க..!!

சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு            –   கால் கப்
கோகோ பவுடர்             –  கால் கப்
சர்க்கரை                           – 2 டேபிள்ஸ்பூன்
காபி பவுடர்                      – அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்              – அரைக்கால் டீஸ்பூன்
பால்                                     –   அரை கப்
சாக்லேட் சிப்ஸ்            –  அரை கப்
வெண்ணெய்                   – ஒரு டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ்       – ஒரு டீஸ்பூன்
உப்பு                                    – ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில்  ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் எண்ணெயை ஊற்றி, விஸ்க்கை வைத்து ஒன்று சேரும் அளவுக்கு நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து கருப்பட்டியை போட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரையும் அளவுக்கு கொதிக்க வைத்து இறக்கி ஆற வைத்து தயிர் கலவையுடன் சேர்த்து விஸ்க்கை வைத்து கலக்கி  கொள்ளவும்.

  பிறகு மற்றோரு பவுலில் கோதுமை மாவு, கொக்கொ பவுடர் போட்டு நன்கு கலந்தபின்,  தயிர் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றியபின், அதனுடன் பால் ஊற்றி விஸ்க்கால் நன்கு கலக்கவும்.

மேலும் கோதுமை கலவையுடன், சோடா உப்பு, பேக்கிங் பவுடரை  சேர்த்து கட்டியில்லாமல் கேக் கலவையின் பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.

மைக்ரோ ஓவனில் உள்ள கேக் செய்யும் பாத்திரத்தை எடுத்து, அதன் உள் பகுதியில் சுற்றிலும் எண்ணெய் தடவியபின் லேசாக கோதுமை மாவு தூவி சுற்றிலும் படும்படி வைக்கவும்.

பின்னர் கோதுமை மாவு தூவிய கேக் பாத்திரத்தில் கலந்து வைத்தமாவு கலவையை ஊற்றி சுற்றிலும் படும்படி  ஊற்றி மைக்ரோ ஓவனில் வைத்து 140 f  வெப்ப நிலையில் வைத்தபின், 30 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.

கடைசியாக மைக்ரோ ஓவனிலிருந்து வேக வைத்த கேக்கை எடுத்து, அதன் மேல் சாக்லேட் சிரப்பை சுற்றிலும் படும்படி ஊற்றியபின்,  அதன் மேல் துருவிய சாக்லேட்டை  தூவி அலங்கரித்து பரிமாறினால், ருசியான சாக்லேட் கோதுமை கேக் ரெடி.

Categories

Tech |