Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்த்ததும்…சாப்பிட தூண்டும்…ஒரு ருசியான…ரோல் கேக் ரெஸிபி…!!

சாக்லெட் சுவிஸ் ரோல் செய்ய  தேவையான பொருள்கள்: 

மைதா                           – 50 கிராம்
கோகோ பவுடர்         – 25 கிராம்
கேரமல் எசென்ஸ்  – 1 டீஸ்பூன்
முட்டை                        – 3
பொடித்த சர்க்கரை  – 100 கிராம்
எண்ணெய்                   – 50 மி.லி
பேக்கிங் பவுடர்          – 1/2 டீஸ்பூன்
பட்டர் பேப்பர்              – 1/4 ஷீட்
விப்பிங் கிரீம்              – 6 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முதலில் முட்டையை எடுத்து அதிலுள்ள மஞ்சள் கருவையும், வெள்ளை கருவையும்  தனித்தனியாக பிரித்ததும்,   வெள்ளை கருவை மட்டும் எடுத்து எலெக்ட்ரிக் பீட்டரை வைத்து நுரை பொங்க நன்கு அடித்ததும், அதில் சர்க்கரையை கலக்கவும்.

பிறகு அதனுடன் பிரித்த மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்ததும், அதில் எண்ணெய், எசென்ஸ் ஊற்றி நன்கு அடிக்கவும். பின்பு  ஹான்ட் பீட்டரை வைத்து மைதா, பேக்கிங் பவுடர், கோகோ பவுடரை சேர்த்து நன்கு கட்டிவராமல் கலந்து கொள்ளவும்.

அதன் பின்பு  பட்டர் பேப்பர் ஷீட் விரித்த பேக்கிங் டிரேயில், கலந்து வைத்த கலவையை ஊற்றி, கரண்டியால் சமன்ப்படுத்தி எடுத்து, ஓவனில், 200 டிகிரி செல்சியஸில், 5 நிமிடங்கள், ப்ரீ ஹீட் செய்து, அதில் சன்படுத்தப்பட்ட கலவையை வைத்து கொள்ளவும்.

பிறகு ஓவனில் வேக வைத்த கலவையை 150 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் பேக் செய்து, நன்கு ஆறியதும், அதில் விப்பிங் கிரீம் தடவி, மெதுவாக ரோல் செய்து எடுத்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்தபின்பு, அதை வட்ட வட்டமாக வெட்டி எடுத்து பரிமாறினால் சுவையான சாக்லேட் சுவிஸ் ரோல் ரெடி..

Categories

Tech |