Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வெளுத்து வாங்கிற வெயிலுக்கு இதமாக… அதிக புத்துணர்ச்சிய தரக்கூடிய… ஒரு அருமையான ஜூஸ் செய்யலாம்..!!

இளநீர் காக்டெயில் செய்ய தேவையான பொருட்கள் :

 இளநீர்                       – 1
எலுமிச்சை பழம் –  பாதியளவு
புதினா                       – 10 கிராம்
இஞ்சி                        – 5 கிராம்
உப்பு                           – 1 சிட்டிகை
சோடா                       – 100 மில்லி லிட்டர்

செய்முறை:

முதலில் இளநீரை எடுத்து அதிலுள்ள தண்ணீர் மற்றும் அதன் சுற்றியுள்ள வழுக்கையை எடுத்து கொள்ளவும். பின்பு இஞ்சியை எடுத்து தோல் நீக்கியபின்,துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு புதினாவை எடுத்து அதன் இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து கொள்ளவும்.

பிறகு மிக்சிஜாரில்  ஆய்ந்த புதினா இலைகள், நறுக்கிய இஞ்சி துண்டுகள், இளநீரில் உள்ள வழுக்கை மற்றும் அதன் தண்ணீர், லேசாக உப்பு தூவி நன்கு மையாக அரைத்து எடுத்து மற்றோரு பவுலில் வடித்து கொள்ளவும்.

மேலும் வடித்து வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறும், குளிர்ந்த சோடா, ஐஸ்கட்டிகளை சேர்த்துப் பரிமாறினால் அருமையான ருசியில் இளநீர் காக்டெயில் ரெடி.

Categories

Tech |