Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரும்பு சத்துக்கள் நிறைந்த… அருமையான சுவையில்… ருசியான பணியாரம் செய்து அசத்துங்க..!!

பேரிச்சம்பழ சோளப் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

சோள மாவு                                – அரை கப்
உளுந்து மாவு                           – கால்
தூளாக்கிய வெல்லம்           – கால் கப்
பேரிச்சம்பழம்                          – 6 (சிறிதாக நறுக்கவும்)
சமையல் சோடா                     – சிறிதளவு
ஏலக்காய்                                     – கால் தூள் டீஸ்பூன்
எண்ணெய்                                   – தேவைக்கு

செய்முறை:

முதலில் மிக்சி ஜாரில் சோளத்தையும், உளுந்தையும் போட்டு தனித்தனியாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு  பாத்திரத்தில் அரைத்த விழுது, உளுந்தமாவு, சோளமாவு, பேரீச்சம்பழம் சேர்த்து ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தை சேர்த்து,  தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி எடுத்து கொள்ளவும். மேலும் அதனுடன் சமையல் சோடா, ஏலக்காய் தூளை  சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு உளுந்து  மாவு கலவையும், வெல்ல கரைசலுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்கு கரைத்து எடுத்துஅரை மணி நேரம் அப்படியே வைத்து கொள்ளவும்.

பின்பு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து  காய்ந்ததும், அதில்  எண்ணெய் தடவி, மாவு கரைசலை ஊற்றி வெந்ததும், மறுபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து பணியாரங்களாக சுட்டு எடுத்தால் சுவையான  சோளப் பணியாரம் ரெடி.

Categories

Tech |