Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா ? கவலைய விடுங்க… இந்த ரெசிபிய ட்ரை பண்ணுங்க..!!

நண்டு தக்காளி சூப் செய்ய தேவையான பொருட்கள்:

பெரிய நண்டு                     – 2
தக்காளி விழுது                – அரை கப்
வெங்காயம்                        – 1
முட்டை                                – 2
சிக்கன் ஸ்டாக்                  – 1 கட்டி
இஞ்சி                                     – 1 அங்குலத் துண்டு
மிளகு                                     – 1 தேக்கரண்டி
உப்பு                                        – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் நண்டை எடுத்து, அதன் ஓட்டை நீக்கி,  சுத்தம் செய்துக் கொள்ளவும். பின்பு  அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் சுத்தம் செய்த நண்டுகளை போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து கொள்ளவும்.

மேலும் வேக வைத்த நண்டை எடுத்து, அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து  பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் இஞ்சி, தக்காளி, வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அதன் பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய தக்காளியை போட்டு விழுதுகளாக அரைத்து எடுத்து கொள்ளவும். மேலும் அதே மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சியை போட்டு, விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிய பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கொள்ளவும் .

அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் உற்றி, சூடானதும் இறக்கியதும், மற்றொரு பாத்திரத்தில்  சிக்கன் ஸ்டாக் கட்டிகளை எடுத்து, சூடான தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் அரைத்த தக்காளி விழுது, நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது, உதிர்த்த சதை நண்டு, சிறிது உப்பு சேர்த்து சில நிமிடம் நன்கு வேக வைக்கவும்.

மேலும் வேக வைத்த நண்டு கலவையில், கரைத்து வைத்த சிக்கன் ஸ்டாக், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்ததும், அதில் அடித்த முட்டையை சேர்த்து, லேசாக கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி பரிமாறினால், காரசாரமான ருசியில் நண்டு தக்காளி சூப் ரெடி.

Categories

Tech |