காளான் கிரீம் சூப் செய்ய தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
பிரிஞ்சி இலை – சிறிதளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மைதா – 4 டீஸ்பூன்
பால் – கால் லிட்டர்
எண்ணெய் – சிறிதளவுசெய்முறை:
முதலில் காளான், பூண்டு, வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், அதில் மைதா மாவை போட்டு நன்கு வறுத்து கொள்ளவும்
பின்னர்அதில் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கட்டி பிடிக்காமல் கரண்டியால் கிளறி விட்டு கொண்டே நன்கு கொதிக்க விடவும்.
அதன் பின்பு கொதிக்க வைத்த கலவையானது, கெட்டியாகும் வரைநன்கு கொதிக்க விட்டு சிறிதளவு உப்பு சேர்த்ததும் கிளறி விட்டு, கிரீம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதங்கியபின் பிரிஞ்சி இலை, பூண்டு, காளானை சேர்த்து வதக்கவும்.
மேலும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு நன்கு கொதிக்க தொடங்கியதும் அதில் கொதிக்க வைத்த கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்த்ததுடன் ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறினால் சுவையான காளான் கிரீம் சூப் ரெடி.