குடைமிளகாய் சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் – 2 பெரியது
பச்சை மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
புளி – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 10
தேங்காய் – 1 சிறிய துண்டு
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
தாளிக்க:
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் தேங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாயை நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயம்போட்டு வறுத்து எடுத்ததும் புளி சேர்த்து வதக்கி ஆற வைத்து கொள்ளவும்.
அதனை அடுத்து மிக்சிஜாரில் ஆற வைத்த கலவையை போட்டு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து, அதனுடன் அரைத்த கலவையை போட்டு கிளறி இறக்கினால், ருசியான
குடைமிளகாய் சட்னி ரெடி.