Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரத்த சோகையை குணபடுத்துவதோடு… ஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய சீத்தாப்பழத்தில்… ருசியான ஜூஸ் செய்து அசத்தலாம்..!!

சீதாப்பழ மில்க்ஷேக் செய்ய தேவையான பொருட்கள்:

சீதாப்பழம்                         – 4
வெண்ணிலா பவுடர்    – 2 ஸ்பூன்
குளிர்ந்த பால்                  – 2 கப்
அச்சு வெல்லம்              – 3 ஸ்பூன்
சாக்லெட் தூள்                – 1 ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ்                 – சிறிதளவு

செய்முறை:

முதலில் சீத்தாப்பழத்தை எடுத்து தோல், விதைகளை நீக்கி விட்டு, சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பின்பு அச்சு வெல்லத்தை எடுத்து துண்டுகளாக்கி  மிக்சிஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாலை ஊற்றி  நன்கு  காய்ச்சி இறக்கி, ஆற வைத்து பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.

பிறகு  மிக்சிஜாரில் விதை நீக்கிய சீதாப்பழம், வெண்ணிலா பவுடர், குளிர வைத்த பால், பொடித்த அச்சு வெல்லம் போட்டு நன்கு அரைத்தபின், ஐஸ் கியூப்பை சேர்த்து மறுபடியும் அரைத்து  எடுத்து கொள்ளவும்.

மேலும் அரைத்த ஜூஸை எடுத்து கண்ணாடி கிளாசில்  ஊற்றி, அதன் மேல் சாக்லெட் தூளை தூவி பரிமாறினால் ருசியான சீதாப்பழ மில்க்ஷேக் ரெடி.

Categories

Tech |