ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் செய்ய தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – முக்கால் கப்
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – ஒரு கப்
பால் – ஒரு கப்
சோளமாவு – 2 தேக்கரண்டி
பேரீச்சம்பழம் – கால் கப்
இனிப்பூட்டி – 2 தேக்கரண்டி
வால்நட் – சிறிதளவு
செய்முறை:
முதலில் ஆப்பிள்,பேரிச்சம்பழம், வால்நட்ஸை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய ஆப்பிள், சிறிது தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து சில நிமிடம் நன்கு வேக வைத்து மசிந்துவிடாமல் சற்று கிளறியபின் இறக்கிவிடவும்.
அதன் பின்பு மாற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றிக் கொதித்ததும், இறக்கி ஆறவைத்து, அதில் சோளமாவை சேர்த்து கட்டிகள் ஏற்படாதவாறு நன்கு கரைத்து, அதனுடன் பேரீச்சம்பழத்தைப் போட்டு 10 நிமிடங்கள் நன்கு கிளறி ஆற வைத்தால், அதன் மணமும சுவையும் பாலில் கலந்துவிடும்.
மேலும் அதனுடன் வேக வைத்த ஆப்பிள், இனிப்பூட்டியை சேர்த்து நன்கு கலக்கி அதன் மேலேஅலங்கரிக்க வால்நட் துகள்களைத் தூவி குளிர்சாதனபெட்டியில் வைத்து சிறிது நேரம் கழித்து, பரிமாறினால் சுவையான பேரீச்சம்பழம் ஆப்பிள் கீர் ரெடி.