தூத்பேடா செய்ய தேவையான பொருட்கள் :
பால் – 1 லிட்டர்
பட்டர் – 2 ஸ்பூன்
சீனி – 1 கப்
கார்ன் ஃப்ளார் பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா பருப்பு – 25
பாதாம் பருப்பு – 10
செய்முறை:
முதலில் பிஸ்தா பருப்பை நீளமாக துருவியதுடன், பாதாம் பருப்பையும் இரண்டாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
பால் நன்கு சுண்டி ஏடு வர ஆரம்பிக்கும் நேரத்தில் அதில் சீனியைப் போட்டு நன்கு கரைந்ததும், கார்ன் ஃப்ளார் பவுடரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
மேலும் கொதித்த கலவையானது நன்கு திரண்டு கெட்டியான பதம் வந்ததும், அதில் பட்டரை சேர்த்து சிலமணி நேரம் கிளறியபின் இறக்கி கொள்ளவும்.
பின்பு அதை சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். அதன் பின்பு துருவிய பாதாம் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பை எடுத்து உருண்டைகளின் மேல் வைத்து பரிமாறினால் ருசியான தூத்பேடா ரெடி.