டயட் மிக்சர் செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை – 1 கப்
கைக்குத்தல் அவல் – 1 கப்
பொட்டுக்கடலை – 1 கப்
எள் – 10 கிராம் வேர்க்கடலை – 20 கிராம்
தாளிக்க:
பூண்டு – 5 பல்
பெருங்காயம் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கோதுமை, எள், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கைக்குத்தல் அவல் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த பூண்டு, சிறிது கறிவேப்பிலை, மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து தாளித்து, அதனுடன் வறுத்து வைத்துள்ள பொருள்களை சேர்த்து, சிறிது உப்பு கலந்து, பரிமாறினால் சுவையான டயட் மிக்சர் ரெடி.