Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ஜூஸ்ஸ மட்டும் செய்து குடிங்க… இது உடம்புக்கு அவ்ளோ நல்லது..!!

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

டிராகன் பழம்        – 2
தேன்                          – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி               – தேவையான அளவு
குளிர்ந்த நீர்            – தேவையான அளவு

செய்முறை:

முதலில் டிராகன் பழங்களை எடுத்து, இரண்டாக வெட்டியபின், அதில் உள்ள தசைப்பகுதியை மட்டும் சிறிதளவு எடுத்து  தனியாக வைத்து கொள்ளவும். மேலும் அதில் மீதி உள்ள பழங்களை  துண்டுகளாக நறுக்கவும்.

பின்னர் மிக்சிஜாரில் நறுக்கிய மீதியுள்ள டிராகன் பழங்களை போட்டு, அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு அரைத்த ஜூஸை ஒரு டம்ளரிலோ அல்லது பவுலிலோ ஊற்றியபின், அதில் ஏற்கனவே சிறிதளவு நறுக்கிய  டிராகன் பழ துண்டுகள்,  ஐஸ் கட்டிகளை போட்டு பரிமாறினால், சில்லுன்னு வெயிலுக்கு இதமான டிராகன் ஃப்ரூட் ஜூஸ் தயார்.

Categories

Tech |