டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்:
தயிர் – 2 கப்
பாதாம் – 10
முந்திரி – 10
பிஸ்தா – 10
கிஸ்மிஸ் பழம் – 20
குங்குமப் பூ – சிறிது
பேரீட்சை பழம் – 3
தேன் – தேவையான அளவு
ஏலக்காய்ப்பொடி – 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் – சிறிது
செய்முறை:
பாதாம், முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ் பழம், பேரீட்சை பழத்தை பாத்திரத்தில் எடுத்து, தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் நன்கு ஊற வைத்து, மிக்சிஜாரில் மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு ஒரு பவுலிலோ அல்லது ஒரு கிளாஸிலோ தயிர், ஊற வைத்து அரைத்த டிரை ஃப்ரூட்ஸ் கலவை, ருசிக்கேற்ப தேன், ஏலக்காய்ப் பொடி, குளிருக்கு ஏற்ற ஐஸ் கட்டிகளை போட்டு, மிக்சி ப்ளண்டரினால் நன்கு கலக்கியபின், அதன் மேல் குங்குமப் பூவை தூவி பரிமாறினால் ஜில்லுன்னு ஒரு டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி ரெடி.