Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ட்ரை ஃப்ரூட்டில்…அருமையான ருசியில்…தோசை ரெஸிபி…!!

ட்ரை ஃப்ரூட் தோசை செய்ய தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி                        – 1 கப்,
உளுத்தம்பருப்பு                – கால் கப்,
பெரிய கற்கண்டு               – 10 டேபிள்ஸ்பூன்
பேரீச்சம்பழம்                    – 25
உலர் திராட்சை                 – 25
டூட்டி ஃப்ரூட்டி                   – 2 டேபிள் ஸ்பூன்
தேன்                                       – 5 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு                – 30
எண்ணெய்                          – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் புழுங்கலரிசி, உளுந்தம் பருப்பை எடுத்து சுத்தம் கழுவி செய்து, தண்ணீர் ஊற்றி இரண்டையும் தனித்தனியாக  2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். அடுப்பில்கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை  போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு  பேரீச்சம்பழத்தின் விதையை  நீக்கி, சிறு சதுர துண்டுகளாக  நறுக்கி வைக்கவும். மேலும் கற்கண்டை எடுத்து மிக்சிஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.

அதன் பின்பு ஊறிய அரிசி, பருப்பை மிக்சிஜாரில் போட்டு மாவாக அரைத்து, எடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கி, 10 மணி நேரம் நுரை பொங்க வைக்கவும். பின்பு மறுநாள் காலையில், தோசை சுடப்   போகும் போது, அதில்  அரைத்த கற்கண்டை போட்டு, தோசைமாவை நன்கு கலக்கவும்.

பின்னர் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலக்கிய மாவில் ஒரு கரண்டி எடுத்து தோசை கல்லில்,  மெல்லிய தோசைகளாக ஊற்றி கொள்ளவும்

மேலும் வேக வைத்த மாவானது, எண்ணெய் விட்டு வெந்ததும், அதன் மேல் பேரீச்சம்பழம், உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, வறுத்த முந்திரிப்பருப்பை எடுத்து, தோசையின் ஒரு பாதியில் பரப்பியபின், அதன் மேல் சிறிது தேன் ஊற்றி, மறு பாதியில் உள்ள தோசையை மூடியோ, தோசையை ரோல் பண்ணியோ வேக வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான ட்ரை ஃப்ரூட் தோசை ரெடி.

 

Categories

Tech |