Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காதலர் தின ஸ்பெஷலாக… அருமையான ருசியில்… இந்த ரெசிபிய செய்து அசத்துங்க..!!

தம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி                     – 1/4 கிலோ
மட்டன் (அ) சிக்கன் கறி –  1/4 கிலோ
பெரிய வெங்காயம்          – 150 கிராம்
தக்காளி                                  – 150 கிராம்
எண்ணெய்                            – 100 கிராம்
நெய்                                         – 150 கிராம்
தேங்காய்                               – 1 பெரியது
மிளகாய்த் தூள்                  – ருசிக்கேற்ப
பச்சை மிளகாய்                 – 10
இஞ்சி                                      – 1 சிறிய துண்டு
பூண்டு                                     – 10 பற்கள்
சின்ன வெங்காயம்           – 25 கிராம்
பட்டை, கிராம்பு                  – 6

தாளிக்க:

சோம்பு, லவங்கம்           – தேவையான அளவு;
மஞ்சள் தூள்                       – சிறிது
உப்பு                                        – தேவையான அளவு
புதினா, கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித் தழை    – சிறிதளவு

அலங்கரிக்க:

முந்திரிப் பருப்பு                 – 4

செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  1 மணி நேரம் ஊறநன்கு  வைக்கவும். மட்டன் அல்லது சிக்கன் கறியை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டியபின், தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து, அதில் துண்டுகளாக வெட்டிய மட்டன் துண்டுகளை போட்டு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகாய்த் தூளை தூவி பாதி வேக்காடாக வேக வைத்து இறக்கி கொள்ளவும் .

அதன் பின்பு தேங்காயை துண்டுகளாக நறுக்கியபின், மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்தபின் வடிகட்டி அதன் பாலை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். மேலும் பெரிய வெங்காயம், தக்காளி,இஞ்சி, பூண்டு,சின்ன வெங்காயத்தை எடுத்து சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு மையாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் விறகு அடுப்பில் பெரிய தவாவை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, லவங்கம்,சோம்பு, புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லித் தழையை கிள்ளி போட்டு பொரிந்ததும் தாளித்து, அரைத்த இஞ்சி பேஸ்ட்டை  போட்டு வாசனை வரும் அளவுக்கு வதக்கியதும், நறுக்கிய வைத்த வெங்காயம், தக்காளியை  போட்டு நன்கு வேகும் அளவுக்கு வதக்கவும்.

பாசுமதி அரிசியின் அளவிற்கு ஏற்றாற் போல், இரு மடங்கு தண்ணீர் ஊற்றி வடிகட்டிய தேங்காய்ப்பால், வேக வைத்த கறி துண்டுகள் அதன் தண்ணீரை சேர்த்து, உற வைத்த அரிசியை மட்டும் வடித்து போட்டு, கரண்டியால் நன்கு கிளறி விட்டபின், மீதி உள்ள மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு, ருசிக்கேற்ப கூடுதலாக உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டபின், தவாவின் முடி வைத்து கொள்ளவும்,

மேலும் தவாவை முடி வைத்தபின், விறகு அடுப்பை அணைத்து அதில் உள்ள சூடான தணல்களை முடியின் போட்டு சுற்றிலும் பரப்பி விட்டு 20 நிமிடம் கழித்து பிரியாணி உதிரியாக வந்ததும், முடியை திறந்து  அதில் சிறிதளவு வறுத்த முந்திரியை நெய்யுடன் ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி வைத்து, சூடாக இலையில் பரிமாறினால் அருமையான ருசியில், சூடான தம் பிரியாணி ரெடி.

Categories

Tech |