முட்டை சாட் செய்ய தேவையான பொருட்கள் :
முட்டை – 3
தக்காளி கெட்ச்அப் (ketchup) – 1 டீஸ்பூன்
தக்காளி சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி
புளி சாறு – 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
வறுத்த சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1
சாட் மசாலா – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
பூந்தி – சிறிதளவு
செய்முறை :
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் முட்டையை போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு வேக வைத்து எடுத்து, தோல் நிக்கியபின், இரண்டாக வெட்டி கொள்ளவும்.பின்பு பச்சை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும்.
அதன் பின்பு பாத்திரத்தை எடுத்து, அதில் தக்காளி கெட்ச்அப், தக்காளி சில்லி சாஸ், புளி சாறு, எலுமிச்சை சாறு, வறுத்த சீரகம், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பிறகு அகலமான தட்டை எடுத்து, அதில் வெட்டிய முட்டையை வைத்து, அதன் மேல் கலந்து வைத்துள்ள சாஸை முட்டையை சுற்றி எல்லா இடங்களில் படும்படியாக ஊற்றவும்.
இறுதியில்அதன் மேல் நறுக்கிய வெங்காயத்தாள், பூந்தி, சாட் மசாலா தூவியபின் எடுத்து பரிமாறினால் ருசியான முட்டை சாட் தயார்.