முட்டை கறி செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 6
வெங்காயம் – 2
இஞ்சி – அரை துண்டு
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
பூண்டு விழுது – 6 எண்ணம்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைபிடி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, முட்டையை போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து தோல் நீக்கி, அதை பாதியாகவெட்டி எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் இஞ்சி, பூண்டை போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கியபின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதங்கிய பின், தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியில் கொதிக்க வைத்த கலவையானது மசாலா வாசனை போனதும், வெட்டிய முட்டையை சேர்த்து நன்கு ஒருமுறை கொதி விட்டதும், இறுதியில் தேங்காய பால் சேர்த்து, சிறிது கிளறி இறக்கி பரிமாறினால், ருசியான முட்டை கறி ரெடி.