Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாலை நேர ஸ்னாக்ஸ்சாக… இந்த ரெசிபிய… இரண்டே நிமிஷத்துல செய்து அசத்துங்க…!!

எக் நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

நூடுல்ஸ்                        – 1 பாக்கெட்
முட்டை                          – 4
பூண்டு                              – 2 பெரிய பற்கள்
நட்சத்திர சோம்பு        – 1
பச்சை மிளகாய்           – 3
மிளகு தூள்                     – தேவையான அளவு
வினிகர்                            – 1 தேக்கரண்டி
எண்ணெய்                      – தேவையான அளவு
குடை மிளகாய்            – 1
வெங்காயம்                   – 1
கேரட்                                 – 1
தக்காளி சாஸ்              – ருசிக்கேற்ப

செய்முறை:

முதலில் பச்சை மிளகாய், குடை மிளகாய், கேரட், வெங்காயத்தை தோல் நிக்கியபின், அவற்றை தேவையான வடிவத்தில் துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து, அதில் 3கப் தண்ணீர் ஊற்றியபின் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில்பாக்கெட்டில் உள்ள நூடுல்ஸைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஓரளவு நன்கு வெந்ததும்,இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  அதில் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, நட்சத்திர சோம்பு போட்டு நன்கு  வதக்கவும். பின்பு அதனுடன் நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம், கேரட்டை போட்டு சில நிமிடம் நன்கு வதக்கவும்

பிறகு வதங்கிய கேரட் கலவையை, வாணலியின் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றியபின், சிறிது கிளறி விட்டபின்,கேரட் கலவையையும், கிளறி விட்ட முட்டையை ஒன்றாக கலந்து நன்கு கிளறி விடவும்.

மேலும் முட்டை வெந்து கிளிரி விட்டபின், அதனுடன் தேவையான அளவு வினிகரை ஊற்றி, மிளகு தூள், தக்காளி  சாஸையோ அல்லது ஜோயா சாஸை ஊற்றிசில நிமிடம் நன்கு கிளறி விட்டபின், வேக வைத்த நூடுல்ஸ், கூடுதலாக சிறிதளவு மிளகு தூள், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, கரண்டியால் நன்றாக கிலறி விட்டு, சில நிமிடம் வேக வைத்து இறக்கி வைத்து பரிமாறினால் ருசியான எக் நுடுல்ஸ் ரெடி.

Categories

Tech |