Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சளி, இருமலிருந்து விடுபட்டு… தொண்டை இதமாக இருக்க வேண்டுமா ? அப்போ இந்த டிப்ஸ follow பண்ணுங்க..!!

மிளகு முட்டை வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை                           – 3
பெரிய வெங்காயம்    – 1
பச்சை மிளகாய்            – 1
கறிவேப்பிலை              – 1 கொத்து
மிளகுதூள்                       – 1 ஸ்பூன்
சோம்புத்தூள்                 – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை  – சிறிதளவு
உப்பு                                   – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் முட்டையை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து இறக்கி ஆற வைத்து, முட்டையின்  தோல் உரித்து, பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கியபின், வெங்காயம் நன்கு வதங்கியதும்,அதில் மிளகுத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

மேலும் வதக்கிய மிளகுத்தூளின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதங்கியதும், அதில் பாதியாக வெட்டிய முட்டையை போட்டு, சிறிது கிளறி நன்கு வேக வைக்கவும். இறுதியாக நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறினால் ருசியான மிளகு முட்டை வறுவல் ரெடி

Categories

Tech |