எலுமிச்சை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
சூடான பச்சரிசி சாதம் – 200 கிராம்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய்ம் – 4
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
எலுமிச்சை பழம் – 2
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
முதல்ல பச்சரிசி சாதத்தை குழையாமல் வேக வைத்து எடுத்து ஆற வைக்கவும். பின்னர் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.போட்டு
பின்பு வாணலியை அடுப்புல வச்சி, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடேறியதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை போட்டு நல்லா சிவக்கும் அளவுக்கு தாளித்தபின், அதனுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில சேர்த்து நன்கு வதக்கிய பிறகு இறக்கி கொள்ளவும்.
பிறகு வேக வைத்த சாதத்துடன், இறக்கி வச்ச எலுமிச்சை பழக் கலவையை ஊற்றி நன்கு சாதத்தில் படும்படி கிளறி விட்டபின் நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறினால் ருசியான எலுமிச்சை சாதம் ரெடி.