Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்க வேண்டுமா ? அப்போ இந்த டிப்ஸ follow பண்ணுங்க..!!

இஞ்சி                            – 100 கிராம்
நெல்லிக்காய்            – 100 கிராம்
பூண்டு                           – 50 கிராம்
வெல்லம்                    – சிறிது
பெருங்காயத் தூள் – 1/2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள்       – 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்             – 2 மேசைக்கரண்டி
வெந்தயம்                 – வறுத்துப் பொடித்தது
நல்லெண்ணெய்    – 2 மேசைக்கரண்டி
உப்பு                             – தேவையான அளவு

செய்முறை:

முதலில் இஞ்சியை எடுத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி துண்டு, பூண்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

மேலும் அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெல்லிக்காயை போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து இறக்கியபின், அதைகரண்டியால் மசித்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தை போட்டு நன்கு வறுத்து, இறக்கி ஆற வைத்தபின், மிக்சிஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.

பிறகு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அதில் மசித்த நெல்லிக்காய் , வெல்லம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம், பெருங்காயத் தூள் தூவி தாளித்து, பச்சை வாசனை போனதும், சிறிது கிலறியபின் இறக்கி, சாதத்துடன் பரிமாறினால் ருசியான இஞ்சி-நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

Categories

Tech |