Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாலை நேர ஸ்பெஷலாக… அசைவ பிரியர்களுக்கு பிடித்த அருமையான சுவையில்… டீ யுடன் குடிக்க ஏற்ற ருசியான ஸ்னாக்ஸ்செய்யலாம்..!!

இறால் பஜ்ஜி செய்ய தேவையானப் பொருட்கள்:

இறால்                                       – 1/2 கிலோ
மைதா                                       – 2 கையளவு
அரிசி மாவு                             – 1 கையளவு
சோள மாவு                            – 1 கையளவு
உப்பு                                           – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்                   – 2
இஞ்சி, பூண்டு விழுது       – 1 டீஸ்பூன்
எண்ணெய்                              – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் பாத்திரத்தில் இறாலை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டை மிக்சிஜாரில் போட்டு  நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். அடுத்து அதே மிக்சி ஜாரில் பச்சை மிளகாயை போட்டு அரைத்து  கொள்ளவும்.

அதன் பின்பு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால், மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விரவி சில நிமிடங்கள் உற வைக்கவும்.

அதனை அடுத்து அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உற வைத்த இறால் துண்டுகளை அதே மாவில் நன்கு புரட்டி கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொரித்து  எடுத்து பரிமாறினால் சுவையான  இறால் பஜ்ஜி தயார்.

Categories

Tech |