இறால் வடை செய்ய தேவையான பொருள்கள் :
இறால் – 100 கிராம்
உடைத்த கடலை – 1 கப்
கடலை மாவு – அரை கப்
வெங்காயம் – பெரியது 1
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 6 பல்
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
சோம்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை பாத்திரத்தில் போட்டு, அதன் தோல் உரித்து, சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். மேலும் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சுத்தம் செய்த இறாலை போட்டு, அதனுடன் உப்பு, மஞ்சள் பொடியை கலந்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.
பின்பு அதை மிக்சிஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சிஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். பிறகு அதே மிக்சிஜாரில் இஞ்சி, பூண்டு, சோம்பு போட்டு அரைத்து கொள்ளவும்.
மேலும் பாத்திரத்தில் வேகவைத்து அரைத்த இறால், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்து வைத்துள்ள மசாலா, உடைத்த கடலை, கடலை மாவு, உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாயை போட்டு நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி கொதித்ததும், பிசைந்து வைத்துள்ள மாவில், சிறு வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால் ருசியான இறால் வடை தயார்.