Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எண்ணெய் அதிகம் உறியாத… அதிரடியான ருசியில்… க்ரிஸ்பி fish கட்லெட் ரெசிபி..!!

மீன் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள் :

மீன்                                         – 1/2 கிலோ
பெரிய வெங்காயம்        – 2
பச்சை மிளகாய்                – 3
முட்டை                               – 1,
இஞ்சி                                     – சிறிய துண்டு
பூண்டு                                    – 6 எண்ணம்
மிளகாய்த்தூள்                  – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள்                        – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்                        – சிறிதளவு
பிரட்தூள்                              – தேவையான அளவு
எலுமிச்சம்பழச்சாறு      – 1 டீஸ்பூன்
எண்ணெய்                           – தேவையான அளவு
உப்பு                                        – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி, மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தில் மீனை எடுத்து செல் நீக்கி, துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் நறுக்கிய மீன் துண்டுகளை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்து,  எடுத்து மீனின் தோல் மற்றும் அதன் முள்களை நீக்கிவிட்டு, நன்கு மசித்து எடுத்து கொள்ளவும்.

மேலும் மசித்த மீனுடன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி இறக்கி எடுத்து கொள்ளவும்.

மேலும் இதனுடன் மசித்து வைத்த மீன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து நன்கு கெட்டியாக  பிசைந்து தேவையான வடிவத்தில் கட்லெட்டாக செய்து எடுத்து  கொள்ளவும்.

பின்னர் மற்றொரு பாத்திரத்தில்  முட்டை, மிளகுத்தூள், உப்பு சேர்த்துநன்கு நுரை பொங்க அடித்து எடுத்து  கொள்ளவும். அதனை அடுத்து கிண்ணத்தில் ப்ரட்தூள்களாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

இறுதியில் வாணலியை அடுப்பில் வைத்து, பொரிக்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி  சூடானதும், கட்லெட்டுகளாக செய்த துண்டுகளை எடுத்து முதலில் முட்டை கலவையில் நனைத்தும், அதை உதிர்த்த பிரட்தூளில் போட்டு பிரட்டி,கொதிக்கின்ற  எண்ணெயில் போட்டு  பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால், அதிக சுவையில் மொறுமொறுப்பான மீன் கட்லெட் ரெடி.

Categories

Tech |