மிளகு மீன் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
முள் இல்லாத மீன் – 500 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
தயிர் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 கட்டு
உப்பு – தேவையானஅளவு
எண்ணெய் – 5 ஸ்பூன்
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழையை சிறு துண்டுகளாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் நறுக்கி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு பாத்திரத்தில் மீன்களை எடுத்து துண்டுகளாக நறுக்கி, நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், சீரகம் போட்டு தாளித்ததும்,நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு சிவக்க வறுத்தும், அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கியவுடன், அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு நிமிடம் வதக்கி கொள்ளவும்.
மேலும் அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து லேசாக வதக்கியபின், அதில் தயிர், கரம் மசாலா, எலுமிச்சை சாறு, சிறிது மிளகு தூள்,ருசிக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
இறுதியில் வதக்கிய கலவையிலிருந்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு வதக்கியதும், அதில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி லேசாக கிளறி விட்டு, நன்கு கொதித்ததும்,அதனுடன் நறுக்கிய மீன் துண்டுகளை போட்டு சில நிமிடம் நன்கு வேக விட்டு கெட்டியானதும், கரண்டியால் மீன் துண்டுகள் உடையாத அளவுக்கு கிளறி விடவும்.
கடைசியாக கிளறிவிட்ட மீன் துண்டுகளிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அதில் நறுக்கிய கொத்தமல்லி தழை, எலுமிச்சைசாறு ஊற்றி இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான மிளகு மீன் மசாலா ரெடி.