Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசைவப் பிரியர்களுக்கு பிடித்த… கிராமத்து மனத்துடன்… சாதத்துக்கு ஏற்ற ருசியான சைடிஸ்..!!

மீன் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

மீன்                                – 1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத மீன்)
மஞ்சள் பொடி          – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்          – 4 மேஜைக்கரண்டி
வெந்தய பொடி       – 1 மேஜைக்கரண்டி
பூண்டு                         – 1
இஞ்சி                          – சிறிய துண்டு
வினிகர்                      – 1/2 கப்
உப்பு                             – தேவையான அளவு
கடுகு                            – 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை   – சிறிது
நல்லெண்ணெய்    – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் மீன்களை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு  இஞ்சி, பூண்டை எடுத்து தோல் நீக்கியபின், பொடியாக நறுக்கி வைக்கவும்.

பிறகு சுத்தம் செய்த மீன் துண்டுகளுடன், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து நன்கு மீனை சுற்றிலும்நன்கு விரவியதும் 30 மணி நிமிடம் நேரம் நன்கு ஊற வைக்கவும்.

மேலும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு பொன் நிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு போட்டு  பொரிந்ததும் கறிவேப்பிலை, நறுக்கி வைத்த   இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு அதில் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிளறியபின், வறுத்த  மீன் துண்டுகளை சேர்த்து சில  நிமிடம் நன்கு கிளறவும்.

மேலும் கிளறிய கலவையானது நன்கு கெட்டியானதும், அதனுடன் வினிகர் சிறிது  சேர்த்து கிளறியப்பின் அடுப்பில் இறக்கி பரிமாறினால் சாதத்துக்கு ஏற்ற ருசியான மீன் ஊறுகாய் ரெடி.

Categories

Tech |