பிரை பனானா செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 2
மைதா மாவு – அரை கப்
சோள மாவு – கால் கப்
சர்க்கரை – அரை கப்
எள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவை போட்டு, சிறிது தண்ணீர் விட்டு ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு நன்கு கரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு வாழைப்பழங்களை எடுத்து, தோல் நீக்கி விட்டு, தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் நான் ஸ்டிக் தவாவை வைத்து, அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை எடுத்து கரைத்த மைதா மாவில் நனைத்து, கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் சர்க்கரை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, தண்ணீர் வற்றி கம்பி பதம் வரும் வரை கிளறி விடவும். மேலும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எள்ளை போட்டு நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.
மேலும் பொரித்து எடுத்த பழத்துண்டுகளை சர்க்கரை கலவையில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து கொள்ளவும். பின்பு அதன் மேல் தேவைப்பட்டால் வறுத்து எடுத்த எள்ளை, ஊறவைத்த பழத்துண்டுகளின் மீது தூவி, அலங்கரித்துப் பரிமாறினால், ருசியான ப்ரை பனானா ரெடி.