பூண்டு நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் – 1 பாக்கெட்
பூண்டு – 10 பற்கள்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 2
கேரட் – 1
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அகலமான கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
நன்கு கொதித்ததும், அதில் பாக்கெட்டில் உள்ள நூடுல்ஸை உதிர்த்து போட்டு, ருசிக்கேற்ப உப்பு தூவி, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் நன்கு வேக வைத்து இறக்கி கொள்ளவும்.
பின்னர் வேக வைத்த நூடுல்ஸை, ஆற வைத்து,அதில் உள்ள தண்ணீரை வடிக்கட்டியபின், குளிர்ந்த தண்ணிரால் வேக வைத்த நூடுல்ஸை கழுவி தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு கேரட், வெங்காயம் ,பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் அகலமான வாணலியை வைத்து, சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு, மிளகாய் தூள் சேர்த்து சில நிமிடம் வதக்கி கொள்ளவும்.
பின்பு நறுக்கிய கேரட்துண்டுகள், வெட்டி வைத்த பச்சை மிளகாய் போட்டு, சிறிது உப்பு தூவி சில நிமிடம் நன்கு வதக்கியபின், அதனுடன் சோயா சாஸ் சேர்த்து கரண்டியால் நன்கு பிரட்டியபின், வேக வைத்த நூடுல்ஸை போட்டு வதக்கிய கலவையானது நூடூல்ஸ் சுற்றிலும் படும்படி, நன்கு கிளறியபின் இறக்கி வைத்து பரிமாறினால் ருசியான பூண்டு நூடுல்ஸ் தயார்.