கமர்கட்டு செய்ய தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் – ஒரு கப்,
வெல்லம் – முக்கால் கப்,
நல்லெண்ணெய் – அரை டீஸ்பூன்
செய்முறை :
முதலில் தேங்காயை துருவி எடுத்து, அதை மிக்ஸிஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பரபரவென்று அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விடவும்.
பின்பு அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருளவரும் வரை, கரண்டியால் நன்கு வதக்கியபின் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
பிறகு கலவையானது கெட்டியாக வரும் போது இறக்கிய பின்பு, ஆறி இறுகுவதற்குள் கலவையை எடுத்து நன்கு அழுத்தி, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து பரிமாறினால் சுவையான கமர்கட்டு ரெடி!