இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ் செய்ய தேவையான பொருள்கள்:
இராசவள்ளிக் கிழங்கு – 1
தேங்காய்ப்பால் – 2 1/2 கப்
சீனி – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை;
முதலில் இராசவள்ளிக் கிழங்கை எடுத்து, தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டி 2 கப் அளவுக்கு வெட்டி எடுத்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் தேங்காய் பால் ஊற்றியதும், நறுக்கிய கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்கு குலையும் அளவுக்கு, வேக வைக்கவும்.
பிறகு வேக வைத்த கிழங்கில், சீனி, உப்பு போட்டு கலந்து நன்கு கொதிக்க வைக்கவும்.பின்பு வேக வைத்த கலவையில், சீனி நன்கு கரைந்ததும், கிழங்கில்அகப்பையால் நன்கு மசித்து கூழாக்கி கொள்ளவும்.
இறுதியில் நன்கு கொதிக்க வைத்து கெட்டியானதும்,இறக்கி பரிமாறினால் சுடச்சுட சூடான இனிப்பு ருசியில், இராச வள்ளிக்கிழங்கு இனிப்பு கூழ் ரெடி.