இறால் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
இறால் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1/2தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
செய்முறை:
முதல்ல இறாலை ஒரு பாத்திரத்துல எடுத்து தோல் நீக்கியபின், தண்ணீர்ல நல்லா சுத்தம் பண்ணி எடுத்துக்கணும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கணும்.
பிறகு கடாயை அடுப்பில வச்சி, சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சோம்பு போட்டு பொரிந்ததும், நறுக்கி வச்ச வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நல்லா வதங்கியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து நல்லாபச்சை வாசனை போகும் வரை வதங்கியபின், நறுக்கிய தக்காளியை போட்டு நன்கு குழையுற அளவுக்கு வதக்கிக்கணும்.
பின்னர் தக்காளி நல்லா வதங்கியபிறகு, அதில் ருசிக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் போட்டு நல்லா வதங்கியதும், அதில் சுத்தம் செய்த இறாலை போட்டு பத்து நிமிடம் நல்லா வதக்கியபிறகு, இறால் வேகுற அளவுக்கு தண்ணீர் ஊற்றி, முடி வச்சி சில நிமிடம் நல்லா வேக வைக்கணும்.
இறுதியில் வேக வச்ச இறாலை நல்லா வெந்து கெட்டியாகி, தண்ணீர் வற்றி இருகியபின், நல்லா கிளறி விட்டபின் இறக்கி வைக்க போகும் போது, அதில் மிளகுத்தூள், சோம்புத்தூள் போட்டு லேசாக கிளறி விட்டபின், கொத்தமல்லி தழையை தூவியபின், இறக்கி வச்சி சூடாக பரிமாறினால் ருசியான இறால் தொக்கு தயார்.