பலாப்பழ தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – 1 கப்
ஏலக்காய் பவுடர் – 1 தேக்கரண்டி
பலாப்பழ துண்டுகள் – 2 கப்
வெல்லத்தூள் – 1 கப்
நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் பச்சை அரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும். பின்னர் பலாப்பழத்தை அதன் கொட்டையை நீக்கியபின், துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு மிக்சிஜாரில் ஊற வைத்த அரிசி மற்றும் ரவை சேர்த்து நன்கு மையாக அரைத்து கொள்ளவும். பிறகு அதே மிக்சிஜாரில் வெல்லம், நறுக்கிய பலா பழத்துண்டுகளையும் போட்டு நன்கு மையாக அரைக்கவும்.
மேலும் அரைத்த பலாப்பழ கலவை, ஏலக்காய் பொடி, அரைத்த அரிசிமாவுடன் சேர்த்து நன்கு கலக்கியதும், அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்
இறுதியில் தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி, கலந்து வைத்த மாவில் ஒரு கரண்டி எடுத்து சூடான கல்லில் தோசை போல் ஊற்றி, அதன் சுற்றிலும் சிறிது நெய் ஊற்றி, இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து, பரிமாறினால் அருமையான பலாப்பழத் தோசை ரெடி.