பலாப்பழ வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
பலாச்சுளை – 10
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பலாபழத்தில் உள்ள பழத்தை காயாக இருக்கும் போதே அதன் சுளைசுளைஎடுத்து, அதிலுள்ள கொட்டைகளை நீக்கியபின், அதை நீளமாகவும், ஒல்லியான குச்சி போலவும் நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் அகலமான வாணலியை வைத்து அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி கொதித்ததும், அதில் நறுக்கிய பலாச்சுளைகளை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்..
மேலும் வறுத்து வைத்த பலாச்சுளையில் ருசிக்கேற்ப உப்பு தூவி, தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் நன்கு குலுக்கி எடுத்து சூடாக பரிமாறினால் ருசியான சுவையான பலாப்பழ வறுவல் ரெடி. கண்ணாடி பாட்டிலோ அல்லது காற்று போகாத டப்பாவில் போட்டு ஒருவாரத்திற்கு மேல் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.