Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மார்னிங் ஸ்பெஷலாக… உடம்பிற்கு குளிர்ச்சி அளிக்க கூடிய… ருசியான ஜவ்வரிசி சுண்டல் ரெசிபி..!!

ஜவ்வரிசி சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி                      – 1 கப்
பாசிப் பருப்பு               – 1/4 கப்
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு                                – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்                   – 2 டீஸ்பூன்
கடுகு                               – 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை          – சிறிது
பச்சை மிளகாய்        – 1
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை: 

முதலில் பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து,அதில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும். பின்பு தேங்காயை எடுத்து பொடியாக துருவி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாசிப்பருப்பை பொட்டு பொன்னிறமாக வறுத்ததும், அதில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து சில நிமிடம் நன்கு வேக வைக்கவும்.

பின்பு வேக வைத்த பாசி பருப்பை இறக்கி, அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை,பச்சை மிளகாய், பெருங்காய தூளை சேர்த்து தாளித்ததும், அதனுடன் ஊற வைத்த ஜவ்வரிசியைப் போட்டு, நன்கு கிளறவும்.

மேலும் அதனுடன்  வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து சிறிது கிளறி, அதில் சிறிதளவு உப்பு, துருவிய தேங்காயை சேர்த்து சிறிது கிளறி, இறக்கி பரிமாறினால், ருசியான ஜவ்வரிசி சுண்டல் தயார்.

Categories

Tech |