ஜிகர்தண்டா செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 1 தேக்கரண்டி
பாதாம் பிசின் – 2 தேக்கரண்டி
பாலாடை – தேவையான அளவு
சர்பத் – 4 தேக்கரண்டி
சர்க்கரை – தேவையான அளவு
ஐஸ்க்ரீம் – 2 ஸ்கூப்
ஐஸ்கட்டி – தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் பாதாம் பிசினை எடுத்து தண்ணீரால் கழுவி, முதல் நாள் இரவே அதை மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு சுண்டக் காய்ச்சி எடுக்கவும். பின்னர் காய்ச்சி வைத்த பாலில், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
கண்ணாடி டம்ளரில் குளிர வைத்த பாலை ஊற்றவும். அதனுடன் ஊற வைத்த பாதாம் பிசின், சர்பத், சிறிது ஐஸ்கட்டி துண்டுகள், நமக்குத் தேவையான ஃப்ளேவரில் ஐஸ்க்ரீமை ஊற்றி கொள்ளவும்.
இறுதியில் அதனுடன் பாலாடையினை ஊற்றி மிதக்க விட்டு பரிமாறினால், ஜில்லென்று இருக்கும் ஜிகர்தண்டா ரெடி.