Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாயில் வச்சதும்… எளிதில் கரையக் கூடிய… இந்த அருமையான ரெசிபிய… செய்து குழந்தைகளுக்கு கொடுங்க..!!

ஜீரோ போளி செய்ய தேவையான பொருட்கள்:

ரவை                 – 200 கிராம்
கேசரி பவுடர் – சிறிதளவு
சர்க்கரை          – 200 கிராம்
எண்ணெய்     – 250 மில்லி

செய்முறை:

முதல்ல ரவாவை ஒரு பாத்திரத்துல எடுத்து லேசாக தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடரை சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்ததும், முடி வச்சி அதை 2 மணி நேரம் கழித்து, சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டியதும், அதை சிறிய அப்பள வடிவில் தட்டி கொள்ளவும்.

பிறகு அடுப்புல கடாயை வச்சி, பொறிக்க தகுந்த அளவு எண்ணெய் விட்டு,சூடேறியதும், மிதமான தீயில்,  அப்பள வடிவில் தட்டி வச்ச ரவாவை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கணும்.

ஒரு சின்ன வாணலியை அடுப்பில வச்சி, அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, நல்லா கொதிக்க வைச்சி சர்க்கரை கரைஞ்சி கம்பிப் பதம் வந்ததும், அதில் பொரிச்சி வச்ச ரவா துண்டுகளை போட்டு, 1 மணி நேரம் நல்லா உற வச்சி எடுத்து பரிமாறினால் ருசியான ஜீரோ போளி ரெடி.

Categories

Tech |