Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி, தோசைக்கு ஏற்ற… அதிக ப்ரோட்டீன் சத்துக்கள் நிறைந்த கடலைபருப்பில்… ருசியான சைடிஸ்..!!

கடலைப்பருப்பு தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு            – 1/2 கப்
தேங்காய் துண்டுகள் – 1 கையளவு
வர மிளகாய்                  – 3
தக்காளி                           – 1
கறிவேப்பிலை             – சிறிது
தண்ணீர்                           – தேவையான அளவு
உப்பு                                   – தேவையான அளவு

செய்முறை:

முதல்ல  அடுப்புல கடாயை வச்சி, அதில் கடலைப்பருப்பை மட்டும் போட்டு, நல்லா  பொன்னிறமாக வறுத்து இறக்கி வச்சி, ஆற வைக்கணும். பின்பு தக்காளிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கணும்.

பிறகு மிக்சிஜார்ல வறுத்து வச்ச கடலைபருப்பு, வர மிளகாய், ருசிக்கேற்ப உப்பு தூவி, தேங்காய் துண்டுகள், நறுக்கி வச்ச தக்காளி, கறிவேப்பிலையை போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றியபின் மையாக அரை எடுத்தால், ருசியான கடலைப்பருப்பு தேங்காய் சட்னி ரெடி. மேலும் இதனை கடுகு, கறிவேப்பிலையை போட்டு தாளித்து கொள்ளலாம்.

Categories

Tech |