உங்க வீட்டுல மீதியுள்ள இட்லி இருக்கா கவலை வேண்டாம், அதை வைத்து எளிதில் சுவையான கைமா இட்லி ரெஸிபியா செய்து அசத்துங்க . இந்த கைமா இட்லியைஇந்த ரெஸிபியை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவாங்க.
கைமா இட்லி செய்ய தேவையான பொருட்கள் :
மிதமுள்ள இட்லி – 10
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 2
பச்சை பட்டாணி – 1/4 கப்
குடைமிளகாய் – 1
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிது
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு பொடி – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1
செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை , தக்காளி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு தக்காளி எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பச்சை பட்டாணியை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும். பின்பு மீதமுள்ள இட்லிகளை எடுத்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்,
மேலும் வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து கொள்ளவும்.
அதனைஅடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விடவும்.
அடுத்து அதில் வேக வைத்த பட்டாணி, குடைமிளகாயை சேர்த்து சில நிமிடம் கிளறி விட்டு , பின்பு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்கு கிளறி , கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி இறக்கி பரிமாறினால் சுவையான கைமா இட்லி தயார்.